சனிபகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பதால் நவம்பர் 4-ம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். இந்த ராசியில் இருந்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானமும் தொழில் வளர்ச்சியும் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும். மேஷ ராசியில் உள்ளவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடங்குவதற்கான ஏதாவது திட்டத்தை வைத்திருந்தால் இந்த நேரத்தில் செயல்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். சொத்து வாங்குவதிலும், விற்பனை செய்வதிலும் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
சிம்மம்: இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது செய்து முடிக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும். கடன் இருந்தால் கடனில் இருந்து விடுதலை கிடைக்கும்.
துலாம்:சனி பகவானின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சனி உங்களுக்கு சுகபோகங்களைத் தருவார். சொத்து வாங்கும் எண்ணம் உடையோர், வாகனம், வீடு வாங்கும் எண்ணம் உடையவர்களின் ஆசை நிறைவேறும். சமுதாயத்தில் மரியாதையும் கௌரவமும் துலாம் ராசிக்கு அதிகரிக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு முதலீட்டிற்கு ஏற்ற காலம் இது. இந்த காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபமும், வருமானமும் கிடைக்கும். புதிய தொழில் அல்லது திட்டத்தை உருவாக்கினார் அதில் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீடுகளில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.