தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் படம் மூலம் நடிப்பில் பட்டையை கிளப்பினார். நடிகர் வடிவேலுவுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இந்நிலையி இவரின் இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52) நேற்றைய தினம் காலமானார். ஜெகதீஸ்வரன் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார், மேலும் காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளிலும் நடித்துள்ளார். மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தம்பி மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில் “திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான திரு. ஜெகதீஸ்வரன் (52) அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என இருந்தது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் திரு. வடிவேலு அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தம்பி மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறினார்.