ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது..
நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த மொபைல் RailOne செயலியை இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.. இந்த செயலியை Android மற்றும் iOS தளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். பல்வேறு இந்திய ரயில்வே செயலிகளின் செயல்பாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லட்சக்கணக்கான தினசரி மற்றும் நீண்ட தூர பயணிகளுக்கு, IRCTC டிக்கெட் முன்பதிவு, ரயில் கண்காணிப்பு, PNR நிலை, கோச் இருப்பிடம், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் குறை தீர்க்கும் சேவையை என அனைத்து சேவைகளையும் இந்த RailOne தளத்தில் பெற முடியும். இதற்கு முன்பு வரை, பயனர்கள் IRCTC ரயில் இணைப்பு, பாதையில் உணவு, UTS மற்றும் NTES போன்ற தனித்தனி பயன்பாடுகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயிலியில் பெற முடியும்..
RailOne செயலியின் முக்கிய அம்சங்கள்:
ஒருங்கிணைந்த அணுகல்: பல ரயில் செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைக்கிறது.
ஒற்றை உள்நுழைவு: பயனர்கள் ஏற்கனவே உள்ள IRCTC ரயில் இணைப்பு அல்லது UTSonMobile சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
R-Wallet ஒருங்கிணைப்பு: mPIN அல்லது பயோமெட்ரிக் உள்நுழைவுடன் ரயில்வே மின்-வாலட் அணுகல்.
சேமிப்பு : பல செயலிகளுக்கு பதில் ஒரே செயலியை பயன்படுத்துவதால், மொபைல் ஸ்டோரேஜில் இடத்தை சேமிக்கலாம்.
கெஸ்ட் அணுகல்: OTP அடிப்படையிலான கெஸ்ட் உள்நுழைவு மூலம் விசாரணை செயல்பாடுகள் கிடைக்கின்றன.
மேலும் 3 முக்கிய ரயில்வே முன்பதிவு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
முன்பதிவு சார்ட்
முன்பதிவு சார்ட் இப்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியாகும்.. ஆனால் இனி முன்பதிவு சார்ட் 8 மணி நேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படும்.
தட்கல் முன்பதிவு :
ஜூலை 1, 2025 முதல், ஆதார் அல்லது டிஜிலாக்கர் வழியாக சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் முன்பதிவுகளை அனுமதிக்கப்படுவார்கள். ஜூலை 2025 இறுதிக்குள் OTP சரிபார்ப்பு முழுமையாக அமல்படுத்தப்படும்.
முன்பதிவு முறை மேம்படுத்தல் :
CRIS-உருவாக்கிய தளம் 150,000 டிக்கெட் முன்பதிவுகளையும் நிமிடத்திற்கு 4 மில்லியன் விசாரணைகளையும் கையாளும் வகையில் மேம்படுத்தப்படும்.
கேம்சேஞ்சராக மாறும் RailOne
RailOne செயலி, மரபு அமைப்புகளின் குழப்பத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இப்போது 5 வெவ்வேறு செயலிகளை பயன்படுத்தாமல், ஒரே செயலியில் அனைத்து ரயில் சேவையையும் தடையின்றி அணுகலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
IRCTC இன் Rail Connect செயலி மட்டும் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முதன்மை சேனலாக இது செயல்படுகிறது. இருப்பினும், இந்திய ரயில்வே இதுவரை முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் (UTS), உணவு விநியோகம் (eCatering), புகார்கள் (Rail Madad) மற்றும் விசாரணைகள் (NTES) ஆகியவற்றிற்கு தனித்தனி செயலிகளை நம்பியிருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய ரயில் வலையமைப்பை ஒரே டிஜிட்டல் அமைப்பின் கீழ் கொண்டு வருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். RailOne சூப்பர் செயலி உலகளவில் மிகப்பெரிய ஒற்றைப் பயன்பாட்டு பொதுப் போக்குவரத்து செயலிகளில் ஒன்றாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..