TNPL!. சேப்பாக்கத்தை திணறடித்த சாத்விக்!. பைனலுக்குள் நுழைந்த திருப்பூர்!. 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

chepauk vs tiruppur 11zon

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடின. இதையடுத்து லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் குவாலிபயரில் சேப்பாக்கம் – திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அதிரடியாக விளையாடினர். இருப்பினும், ரஹேஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அமித் சாத்விக் 57 ரன்கள் எடுத்து ஆட்டைழந்தார். இதில், 6 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். அதன் பிறகு வந்த கேப்டன் சாய் கிஷோர் தன் பங்கிற்கு 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசியில் வந்த உத்திரசாமி சசிதேவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.

203 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணி வீரர்கள், திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. மேலும் சேப்பாக்கம் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெல்லும் அணியுடன் ‘தகுதிச்சுற்று 2’ ல் மோத வேண்டும் (ஜூலை 4). இதில் வென்றால் சேப்பாக்கம் மீண்டும் பைனலுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

Readmore: குட்நியூஸ்!. பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு கிரீன் சிக்னல்!. 3.5 கோடி வேலைவாய்ப்புகள்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!.

KOKILA

Next Post

பரபரப்பு...! அஜித்குமார் படுகொலை.. நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக - அதிமுக இணைந்து போராட்டம்...!

Wed Jul 2 , 2025
திருப்புவனம் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று காலை 10 மணிக்கு பாஜக – அதிமுக இணைந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் […]
Edappadi 2025

You May Like