“அன்புமணி என்னை நீக்க முடியாது… அதிகாரம் இல்லை” ராமதாஸ் தான் எல்லாமே… பாமக எம்எல்ஏ அருள் பளீச்..!

anbumani arul

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையைத் தொடர்ந்து ஆதரித்து வந்த அருள், சமீபத்தில் ஒரு பேட்டியில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். “கட்சியில் ராமதாஸ் இருக்கும்வரை தலைவராக அவரே தொடர்வார், அதன் பிறகுதான் அன்புமணி பதவி ஏற்க முடியும்” என அவர் தெரிவித்திருந்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தைலாபுரத்தில் உள்ள வீட்டில் ராமதாஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது கருணைக்கொலைக்கும் சமம் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த பேட்டிக்கு அன்புமணியின் ஆதரவாளர்கள் வன்மையாக எதிர்வினை தெரிவித்த நிலையில், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி அருளை கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அன்புமணி மேற்கொண்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் திரு. இரா. அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கியது குறித்து பதிலளித்த எம்எல்ஏ அருள், “என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை, அத்தகைய முடிவை எடுக்க இயலும் ஒரே நபர் பாமக நிறுவனர் ராமதாஸ் தான். செயல்தலைவரான அன்புமணியால் நீக்க முடியாது. என்னை நீக்க வேண்டுமானால் தலைவரான மருத்துவர் ஐயா ராமடோஸ் தான் நீக்க முடியும். ஒழுங்கு நடவடிக்கை குழுவே இல்லையே. அதுவும் ஐயா கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அன்புமணி கூட அப்படி இல்லையே. என்னை நீக்குவதாரகான அதிகாரம் செயல் தலைவருக்கு இல்லை, பாமக தலைவரான மருத்துவர் ஐயா ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது. அன்புமணி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை மகிழ்ச்சியாக பார்க்கிறேன். 23 ஆண்டுகள் அண்ணன் அன்புமணி “வருகிறார் வருகிறார்” என்று தொண்டைக்கிழிய கத்திக்கிட்டு போனேன். இடைத்தேர்தலில் அன்புமணி பிரச்சாரத்திற்க்காக உழைத்தபோது, என்னுடைய மகள் பிறந்து 28 நாள் கழித்தே அவளை போய் பார்த்தேன். அப்படி உழைத்த எனக்கு அன்புமணி கொடுத்த பரிசு இது” என எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.

Subscribe to my YouTube Channel

Read More: பல ஆண்டு கால வன்மம்.. அவதூறுகள் பற்றி கவலை இல்லை.. அது உற்சாகம் தான்.. ஸ்டாலின் பேச்சு…

Newsnation_Admin

Next Post

"டாய்லெட் கழுவ கூட ரெடி.. ப்ளீஸ் உதவுங்க..!!" வறுமையின் பிடியில் வாழும் கவுண்டமணி பட நடிகை.. கண்ணீர் மல்க வேண்டுகோள்

Wed Jul 2 , 2025
திரைப்பட நடிகர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது வருமானம் இல்லாமல் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது தான் இதன் மறுபக்கம். பெரும்பாலம் துணை நடிகை, நடிகர்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவுண்டமணியும் மற்றும் செந்திலுடன் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை வாசுகி. காரைக்குடியை பூர்விகமாக கொண்ட […]
Actress Vasuki

You May Like