2 வாரங்களில் 900 நிலநடுக்கங்களை கண்ட தீவு… புதிய பாபா வங்காவின் ‘பேரழிவு சுனாமி’ கணிப்பு.. பீதியில் மக்கள்!

g9e2d96c35480fef2d673111ddabe3155ea79b5c52d5656d31 1745149837945 1745149838215 1

கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் அச்சத்தை தூண்டி உள்ளன.


சமீபத்தில் ஜப்பானின் அகுசேகி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அகுசேகி தீவில் உள்ள ஒரு பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஒரு நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

குறிப்பாக, கியூஷு பிராந்தியத்தின் தெற்கே உள்ள டோகாரா தீவு சங்கிலியின் ஒரு பகுதியாக அகுசேகி உள்ளது. இந்த தீவில் ஜூன் 21 முதல் 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், பெரிய சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் தெரியவில்லை.

இன்று அகுசேகி அருகே 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றும், அதே அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனத்தின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்பு பிரிவின் இயக்குனர் அயடகா எபிடாவின் கூற்றுப்படி, வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை.

ஜூலை 5 கணிப்பு

ஜூலை 5 ஜப்பானில் சுனாமி பற்றிய நீண்டகால தீர்க்கதரிசனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரியோ டாட்சுகி நான் பார்த்த எதிர்காலம் இதழில் ஜூலை 5 அன்று ஒரு பெரிய இயற்கை பேரழிவை முன்னறிவித்துள்ளார்.

“ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு இடையே கடலுக்கு அடியில் ஒரு விரிசல். கட்டிடங்களை விட உயரமான அலைகள். மில்லியன் கணக்கானவர்கள் ஆபத்தில் உள்ளனர்”, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி டயானாவின் மரணம், 2011 ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி, கோவிட்-19 தொற்றுநோய் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை டாட்சுகி கணித்திருந்தார். இப்போது ஜூலை 5, 2025 அன்று ஜப்பானைத் தாக்கும் ஒரு மெகா சுனாமி குறித்து அவர் கணித்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்..

Read More : ‘AI மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும்.. இந்த ஒரு வேலை தான் பாதுகாப்பானது..” AI-ன் காட்பாதர் எச்சரிக்கை..

RUPA

Next Post

“அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர்.. எல்லா கொடுமையையும் என் கண்ணால் பார்த்தேன்..” நண்பர் பரபரப்பு பேட்டி..

Thu Jul 3 , 2025
அஜித்திற்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர் என்று அவரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2 நாட்களாக […]
Kalesh 17 1

You May Like