இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான போராட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது.
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தவெக கூறியது.
எனவே வரும் 6-ம் தேதி அஜித்குமார் மரண வழக்கில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தவெக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தவெகவின் முறையீட்டயும் அவர் நிராகரித்தார். மேலும் மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கள்கிழமை விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.



