இன்று நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவின் மாநில செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
தேர்தலையொட்டி விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மிக முக்கியமாக பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதல் 2 தீர்மானங்களை வாசிக்க உள்ளார். தேர்தல் கூட்டணி, பரந்தூர் தொடர்பான தீர்மானங்களை அவர் வாசிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணையக்கூடும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் கொள்கை எதிரி என்று விஜய் பாஜகவை அறிவித்துவிட்டதால் அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இடம்பெறாது என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற தவெகவின் நிலைப்பட்டை விஜய் பேச இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றுவிடுவாரா என்ற சந்தேகம் இருக்கக்கூடாது என்பதற்காக இதுதொடர்பான அறிவிப்பை தான் விஜய் இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
Read More : #Flash : போராட்டத்தை தள்ளி வைங்க.. தவெக-வுக்கு ஹைகோர்ட் அறிவுறுத்தல்.. அவசர வழக்காக விசாரிக்கவும் மறுப்பு..