தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.
தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் தொடங்கிய நிலையில், மேடையில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். இதையடுத்து தவெகவின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வரவேற்புரையாற்றிய பொதுச்செயலாளர் ஆனந்த், இந்த கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். அதாவது “தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒருவர் தவெகவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இருவர் நிர்வாகியாக இருக்க வேண்டும். ஜூலை 2-வது வார இறுதியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டும்” என்று விஜ்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.. கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், 5 மண்டலம், 120 மாவட்டங்களில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்தவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன்பு, மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் மாநாட்டை போலவே இந்த மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகத்தை தவெக தலைவர் விஜய் இந்த கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.. தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
தேர்தலையொட்டி விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முதல் 2 தீர்மானங்களை வாசிக்க உள்ளார். தேர்தல் கூட்டணி, பரந்தூர் தொடர்பான தீர்மானங்களை அவர் வாசிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Read More : கொறடாவை மாற்ற கோரி பாமக எம்.எல்.ஏக்கள் மனு.. தன்னை நீக்க முடியாது என எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..