fbpx

பட வாய்ப்பு கிடைக்காததால் இப்படி ஒரு முடிவா..? நேரில் பார்த்த பிரபலம்..!! நடிகை கீதாவுக்கு என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவில், குணசித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை கீதா. இவர் நடித்த குருதிப்புனல், சிவகாசி, சந்தோஷ் சுப்ரமணியன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தன. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா, முற்றிலும் மாறி ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார் என்று நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், ”நடிகை கீதா பாலசந்தர் மூலம் அறிமுகமானவர். அவர் ஒரு அருமையான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரின் தோற்றம் ஒரு முதிர்கனியாக இருக்கும். ஒரு படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிறகு அம்மா, தங்கை கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், முற்றிலும் ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார். தமிழ்நாட்டில் எங்கு புராண கோவில் இருக்கிறதோ, அங்கு சென்று மூன்று நாட்களாகவாது தங்கி ஆன்மிகவாதியாக மாறிவிடுவார்.

நான் அவரை காஞ்சிபுரத்தில்தான் பார்த்தேன். அவரை பார்க்கும்போது பெண் சாமியார் போல இருந்தது. அப்படி ஒரு பெண் சாமியாராகவே கீதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என பயில்வான் கூறியுள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா, தற்போது எந்த படங்களில் பார்க்க முடிவதில்லை. இவர், கடைசியாக தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான மத்தாப்பூ திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : பட்டா, சிட்டா, அடங்கல்..!! வீடு, மனை வாங்கப் போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பாருங்க..!!

English Summary

Introduced by actress Geetha Balachander. There is no doubt that she is a fantastic actress. But his appearance will be that of an adult.

Chella

Next Post

புகையிலையை தடை செய்வதன் மூலம் 1.2 மில்லியன் இறப்புகளை தடுக்க முடியும்..!! - ஆய்வில் தகவல்

Thu Oct 3 , 2024
Banning tobacco sales can prevent 1.2 million lung cancer deaths: Lancet study

You May Like