போதை பொருள் வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளனர்.
கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் சப்ளையர் கெவின் ஆகியோர் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஜாமீன் கோரி, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.. இந்த வழக்குக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது என்றும் அவர்கள் மனுவில் தெரிவித்திருனனர்.
இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.. போலீசார் ஒத்துழைப்பு அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணா தரப்பில், மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் நேற்று ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் கோரிய இருவரது மனுக்களையும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.. இந்த நிலையில் போதை பொருள் வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளனர்.
Read More : மீண்டும் தவெகவுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்.. விஜய் என்ன செய்யப்போகிறார்..?