அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில புளூடூத் ஹெட்ஃபோன்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய செவிப்புலன் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.
இந்த ஹெட்ஃபோன்களால் அதிக ஆபத்து: CERT வெளியிட்ட இந்த எச்சரிக்கை செய்தியின்படி, சோனி, போஸ், மார்ஷல், JBL மற்றும் ஜாப்ரா போன்ற பிரபலமான பிராண்டுகளில் பயன்படுத்தப்படும் ஐரோஹா புளூடூத் சிப்செட்களில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ப்ளூடூத் பலவீனங்களை பயன்படுத்தி, சைபர் மோசடி காரர்கள் பல்வேறு மோசடி செய்துவருகின்றனர் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, மைக்ரோஃபோன் வாயிலாக ஊடுருவி உரையாடல்களை சுலபமாக கேட்க முடியும், அழைப்பு ஹேக்கிங் செய்யவும் மற்றும் இணைக்கப்பட்ட தொலைபேசிகளுக்கு கட்டளைகளை வழங்கவும் உங்கள் அழைப்பு பதிவுகள் மற்றும் தொடர்புகளைத் திருடவும் அனுமதிக்கும். தாக்குபவர்கள் மற்ற சாதனங்களுக்கு பரவக்கூடிய தீங்கிழைக்கும் ஃபார்ம்வேரையும் செலுத்தலாம்.
Airoha நிறுவனம் புதிய ஃபெர்ம்வேர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும், பயனர்கள் இந்தப் பாதுகாப்பு திருத்தங்களைப் பெற, தங்கள் சாதன உற்பத்தியாளர்கள் அந்த அப்டேட்டை வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள்: அதிக ஒலி அல்லது நீண்ட நேரம் ஹெட்ஃபோன்களைக் கேட்பது நிரந்தர காது கேளாமை, டின்னிடஸ் (காதுகளில் தொடர்ந்து ஒலித்தல்), காது தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால், நீண்ட நேரம் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக இளைஞர்களிடையே, மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும்.
எப்படி தவிர்ப்பது? ஹெட்போன் பயன்பாட்டை தினமும் 2 மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்துங்கள். ஒலி அளவை 60% க்குக் கீழாக வைத்திருங்கள். இடையிடையே ஒலியிலிருந்து இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வயர்டு ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தவும். ஐரோஹா புளூடூத் சிப்செட்களுடன் ஹெட்ஃபோன்களை வைத்திருக்கும் பயனர்கள் உங்கள் ஹெட்ஃபோன் பிராண்டிலிருந்து ஃபார்ம்வேர் புதுப்பிப்புகளைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பொது அல்லது பாதுகாப்பற்ற சூழல்களில் புளூடூத் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் செவிப்புலனைப் பாதுகாக்க பாதுகாப்பான கேட்கும் பழக்கத்தைப் பயிற்சி செய்யுங்கள்.
Readmore: மீண்டும் ஒரு வரதட்சணை கொடூரம்.. ரூ.1.5 கோடி கொடுத்தும் அடங்காத கணவன் வீட்டார்.. பெண் தற்கொலை..