விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 7-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த 7-வது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப், பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, நடிகை தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த முறை யாரும் எதிர்பாராத ட்விஸ்டுகளும் காத்திருக்கிறது. அதன்படி, இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு இருப்பதோடு பிக்பாஸாக பெண் ஒருவரும் குரல் கொடுக்கவுள்ளாராம். இப்படியான நிலையில், பிக்பாஸ் இரண்டு வீடுகளும் இப்படி தான் இருககும் என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பிரம்மாண்ட வீடா என்று ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.