fbpx

”சந்திரயான் விண்ணில் இறங்கும்போது இங்கு சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்குகிறார்கள்”..!! ”இதெல்லாம் தெண்ட செலவு”..!! கொந்தளித்த சீமான்

நிலவை ஆய்வு செய்வது எல்லாம் தெண்ட செலவு.. என் வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ”நிலவில் ஆக்சிஜன் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். இங்கே இருக்கிறதா. அங்கே போய் நீரை தேடுகிறீர்கள். இங்கே இருக்கும் நீர் என்ன ஆனது..? பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இல்லை. சூரியனின் குழந்தைகள் தான் இவ்வளவு கோள்களும்.

சந்திரயான் – 3 விண்ணில் இறங்கும் போது, இங்கே சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்குகிறார்கள். என்ன உங்கள் விஞ்ஞானம். எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்கிறீர்கள். உத்தரப்பிரதேசத்தில் நோயாளி படுத்து இருக்கிறான். அவருக்கு குளுகோஸ் வைக்க ஸ்டேண்ட் கூட இல்லை. கையில் ஒரு அம்மா பிடித்துக் கொண்டு நிற்பதை பார்த்தீர்களா இல்லையா? ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. யாருக்கு ஷோ காட்டுறீங்க என ஆவேசமாக பேசினார்.

இந்தியா நிலவில் குடியேறிடுமா? அதை அமெரிக்கா, ரஷ்யா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா..? அவர்களுக்கு தெரியுது இது வெட்டி செலவு என்று. நீங்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் சந்திரயான் – 3 இறங்குவது எப்படி..? சந்திரயான் இறங்காவிட்டால் நீங்கள் மொத்தமாக இறங்கி விடுவீர்கள். 3 லட்சம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள நிலவுக்கு சந்திரயானை அனுப்ப முடிகிறது. ஆனால், 3 ஆயிரம் கிலோ மீட்டரில் இருக்கும் மணிப்பூருக்கு செல்ல முடியவில்லை.

ஒகி புயலின் போது உங்களால் வர முடியவில்லை. குரங்கனியில் தீ பிடித்து எரியும் போது வர முடியவில்லை. சந்திர மண்டலத்திற்கு நீங்கள் சந்திரயானை விடுறீங்க. நீங்கள் வேண்டும் என்றால், 10 வருடம் கழித்து பாருங்கள் என்ன நடந்தது என்று. இது தெண்ட செலவு. என் வயிறு பசித்து கிடக்கும் போது வான்வெளியில் என்ன ஆராய்ச்சி” என்று ஆவேசமடைந்தார்.

Chella

Next Post

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகிறது ’ஜெயிலர்’..!! எப்போது..? எந்த தளத்தில்..? வெளியான அறிவிப்பு..!!

Sat Sep 2 , 2023
நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியை அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

You May Like