தொலைபேசி அழைப்பை ஏற்காமல் தூங்கிய கேட் கீப்பர்.. ரயில் விபத்து.. வெளியான புதிய தகவல்..

520920 1

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் வெளியான புதிய தகவல் வெளியாகி உள்ளது..

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக கேட் கீப்பரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.. அவர் வடமாநிலத்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாததும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..


இந்த நிலையில், கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் வெளியான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. கேட்டை மூட மறந்துவிட்டதாகவும் விசாரணையில் பங்கஜ் சர்மா தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கஜ் சர்மாவை 22-ம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

இதனிடையே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

RUPA

Next Post

நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை.. அலறிய பயணிகள்..!! என்ன நடந்தது..?

Wed Jul 9 , 2025
நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]
vande bharat

You May Like