சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது..
சென்னையில் இருக்கும் சில சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2021-ல் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் உரிய பதிலளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அபராத தொகையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. அப்போது கோபமான நீதிபதி, தவறான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தாலும், அதை படித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும் எனவும், அப்படி செய்யவில்லை எனில் அவர் ஆணையராக இருக்க தகுதியற்றவர் என்று நீதிபதி கடுமையாக சாடினார்.
மேலும் ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என்று தன்னை நினைத்துக் கொள்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்களும் காட்டலாமா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். உரிய பிரமாண பத்திரங்களுக்கு சென்னை மாநாகராட்சி ஆணையர் நாளை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அதன்பின்னர் அபராத தொகை குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
Read More : “மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது..” CM ஸ்டாலின் பேச்சு..