ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்.. செத்துப்போங்கடா அடிப்பது இல்லை காவல்துறை.. எங்களுக்கு வேறு வழி இல்லை.. நாங்கள் இழந்த உரிமைகளை, எங்கள் விடுதலையை போராடி தான் பெற வேண்டும்..
மடப்புரம் அஜித் கொலையை எதிர்த்து அனுமதி கொடுத்தால் போராடுவேன்.. அனுமதி கொடுக்கவில்லை எனில் தடையை மீறி போராடுவேன்.. அதிகபட்சம் வழக்கு தானே.. வழக்கு வந்தால் பார்த்துக் கொள்வேன்.. எனக்கு 100 கேள்விகள் இருக்கு.. அதை எல்லாம் மக்கள் முன்னாடி எழுப்புவோம்..
ஒரணியில் தமிழ்நாடு என்று திரள்வதே திருடுவதற்கு தான்.. கூடி கொள்ளையடிப்போம்,, கூடி கொலை செய்வோம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்.. நான்கரை ஆண்டுகளாக மண் காக்காமல், மொழி காக்காமல், இனம் காக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாக்கிறோம், சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.. ஆனால் இஸ்லாமியர்களை சிறையில் வைத்து பாதுகாக்கிறீர்கள்.. சிறையில் எதற்கு அடிக்க வேண்டும்.. அடித்து துன்புறுத்தி, கொடும் வார்த்தைகளை பேசி இது என்ன முற்போக்கு சமூகம்?
சிறை என்பது ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரை கண்டித்து திருத்துவதற்கான இடம்.. ஆனால் சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்துகின்றனர்.. விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்வது, சிறைக்குள் வைத்துக் கொள்வது என கொடுமைகளை இழைத்து வருகின்றனர்..
ஏழை தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் ஒரு நாள் இந்த ஆட்சி அதிகாரத்தை அதல பாதாளத்தில் வீழ்த்தும்.. சிறையில் தேவையற்ற தாக்குதல், அடிப்பது இதெல்லாம் நன்றாக இல்லை.. இப்பவும் அதையே செய்கிறீர்கள்.. அது நல்லப்போக்கு இல்லை..
ஜெயராஜ், பெனிக்ஸை அடித்துக் கொன்றீர்கள், இப்போது திருப்புவனத்தில் அஜித்தை விசாரணையில் கொலை செய்தீர்கள்.. அடித்து துன்புறுத்தி குற்றங்களை ஒப்புக்கொள்ள சொன்னால் எப்படி ஒப்புக்கொள்வான்? குற்றங்களை விசாரிக்க ஒரு வரைமுறை இருக்கு.. எங்களுக்கு வேறு வழி இல்லை.. போராட்டம் ஒரே வழி.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன்..
தன்மானத்திற்காக உயிரை விட்ட ஒரு இனத்தின் கூட்டத்தை, 1000, 500, வேட்டி சேலை, சாராயம் என கையேந்தும் பிச்சைக்கார கூட்டமாக, மானங்கெட்ட கூட்டமாக மாற்றிவிட்டு, இன்று இனம், மொழி காக்கிறேன் என்று கூறுகிறீர்கள்.. உங்களிடம் இருந்து இதை எல்லாம் நான் காக்கிறேன்.. இதில் ஓரணியில் திரளனும்.. திரண்டு என்ன செய்யப்போகிறீர்கள்.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்..” என்று தெரிவித்தார்.