இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் 2,130 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய் பாலம் விபத்துகள் என்னென்ன?
குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைத்த காம்பிரா பாலம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்தியாவில் பாலம் இடிந்து விழுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் 2,130 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. முதன்மையாக இயற்கை பேரழிவுகள் (80.3%), பொருள் சரிவு (10.1%) மற்றும் அதிக சுமை (3.28%) காரணமாக இடிந்து விழுந்துள்ளன.. சர்வதேச இதழான ஸ்ட்ரக்சர் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங்கில் வெளியிடப்பட்ட “1977 முதல் 2017 வரை இந்தியாவில் பாலம் தோல்விகளின் பகுப்பாய்வு” என்ற தலைப்பிலான ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட அரசாங்க செய்திக்குறிப்பின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2019-2024) 42 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்தன. கடந்த ஆண்டு சாலைப் போக்குவரத்து அமைச்சகம், 2021 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 21 பாலங்கள் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தது. இதில் 15 பாலங்கள் நிறைவடைந்தவை என்றும் 6 பாலங்கள் கட்டுமானத்தில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நடந்த பாலம் விபத்துகள் என்னென்ன?
ஆகஸ்ட் 2023 இல், மிசோரமின் சாய்ராங் மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த ஒரு ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்து 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஜூன் 15, 2025 அன்று, புனேவின் கோயில் நகரமான குண்ட்மலாவில், இந்திராயானி ஆற்றின் மீது ஒரு இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மாதம், அசாம்-மேகாலயா எல்லைக்கு அருகிலுள்ள ஹராங் ஆற்றின் மீது ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
மோர்பி தொங்கு பாலம் (குஜராத்) – அக்டோபர் 30, 2022 அன்று இடிந்து விழுந்தது, 135 பேர் உயிரிழந்தனர், 56 பேர் காயமடைந்தனர்.
CSMT நடைபாதை மேம்பாலம் (மும்பை) – மார்ச் 14, 2019 அன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் இறந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
வாரணாசி மேம்பாலம் – மே 15, 2018 அன்று இடிந்து விழுந்தது, 18 பேர் உயிரிழந்தனர்.
மஜர்ஹாட் பாலம் (கொல்கத்தா) – செப்டம்பர் 4, 2018 அன்று இடிந்து விழுந்தது, மூன்று பேர் இறந்தனர், 24 பேர் உயிரிழந்தனர்.
விவேகானந்தா சாலை மேம்பாலம் (கொல்கத்தா) – 2016 இல் பகுதியளவு இடிந்து விழுந்தது, 27 பேர் உயிரிழந்தனர்., 80 பேர் காயமடைந்தனர்.
டார்ஜீலிங் மர நடைபாதை பாலம் – அக்டோபர் 22, 2011 அன்று கூட்ட நெரிசலில் இடிந்து விழுந்தது. இதில், 32 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர்.
கமெங் நதி நடைபாதை (அருணாச்சலப் பிரதேசம்) – அக்டோபர் 29, 2011 அன்று இடிந்து விழுந்ததில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
Read More : #Breaking : IAF-ன் ஜாகுவார் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. விமானி உட்பட இருவர் பலி..?