fbpx

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை..!! உங்கள் மொபைலுக்கு இந்த மெசேஜ் வந்துருச்சா..? செக் பண்ணுங்க..!!

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்க வீடு வீடாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது.

மேலும், கள ஆய்வின் போது சேகரிக்கப்படும் விவரங்கள், தமிழ்நாடு அரசின் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வரும் 5 ஆம் தேதிக்குள் முடித்து, தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பத்தில் இருக்கும் சந்தேகங்களை விண்ணப்பதாரர்களிடமே தொடர்பு கொண்டு சரிசெய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின், விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியுள்ளீர்களா..? எச்சரிக்கையாக இருங்க..!! பறிபோன மாணவன் உயிர்..!!

Sun Sep 3 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் சேவியர்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் குருநாத் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கான காரணத்தை அறிய அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குருநாத் பல்வேறு ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்கி டிரேடிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், முறையாக பணமும் திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். […]

You May Like