fbpx

சூப்பர் ஓவரில் தெறிக்கவிட்ட ரிங்குசிங்..!! ஹாட்ரிக் சிக்ஸால் நொந்துபோன பவுலர்..!! வைரல் வீடியோ..!!

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. அவரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு அப்படியொரு பினிஷர் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஏக்கத்தை கடந்த ஐபிஎல் போட்டியில் தீர்த்து வைத்தவர் ரிங்குசிங். கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் தேவை என்ற நிலையில், 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

இவரது பினிஷிங் திறமையை பார்த்த பிசிசிஐ, இவருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு அளித்தது. அதில், வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார் ரிங்குசிங். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ரிங்குசிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிங்குசிங் தற்போது உத்தரப்பிரதேச டி20 லீக்கில் ஆடி வருகிறார். இதில் மீரட் மற்றும் காசி அணிகள் மோதின.

இதில், மீரட் அணிக்காக ரிங்குசிங் விளையாடினார். முதலில் பேட் செய்த மீரட் அணி மாதவ் கெளசிக் அதிரடியால் 181 ரன்களை குவித்தது. ரிங்குசிங் 15 ரன்களுக்கு போல்டானார். இலக்கை நோக்கி ஆடிய காசி அணியும் 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் விளையாடிய காசி அணி 1 விக்கெட்டை இழந்து 16 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரில் மீரட் அணிக்காக ரிங்கு சிங்கும் – திவ்யன்ஷ் ஜோஷியும் களமிறங்கினர்.

சிவா சிங் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத ரிங்குசிங் 2-வது பந்தை அவருக்கு உரித்தான ஸ்டைலில் சிக்ஸருக்கு பறக்க விட்டார். 3வது பந்தை புல் டாஸாக வீச அந்த பந்தும் சிக்ஸருக்கு சென்றது. இதனால், கடைசி 3 பந்தில் மீரட் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4-வது பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரிங்குசிங் சூப்பர் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தது மட்டுமின்றி தனது அணியையும் வெற்றி பெற செய்தார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Sun Sep 3 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 4) தமிழ்நாடு, புதுச்சேரி […]

You May Like