பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.
நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது. அதுமட்டுமல்லாமல், ஒளி வருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதன் மூலம் மெய் தன்மை உறுதி செய்யப்படும்.
அந்த வகையில் இ-பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டு வர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். eservices.tn.gov.in இணையதளத்தில் மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ-பட்டாவை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
Read more: தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடணுமா? இல்ல சர்க்கரையா? எது நல்லது? நிபுணர் பதில்..