“எனது பாடலை பயன்படுத்தக்கூடாது.. உடனே நீக்குங்க..” வனிதாவின் Mrs & Mr படத்திற்கு வந்த சிக்கல்..!! வழக்கு தொடர்ந்த இளையராஜா

vanith

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.


கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளாக இவர், சமீபகாலமாக டிவி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதனிடையே, இவர் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இசையமைப்பாள இளையராஜா உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “வனிதா விஜயக்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள Mr/Mrs திரைப்படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மைக்கேல் மதன காமராஜர் படத்தின் ராத்திரி சிவ ராத்திரி பாடல் எனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Mr/Mrs திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எனது பாடலை நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளார். இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more: ஷாக்.. இன்றும் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.440 உயர்வு..

Next Post

"முத்துராமலிங்க தேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான்.." சொத்துக்களை எங்களிடம் ஒப்படையுங்கள்..!! - கலெக்டரின் பரபரப்பு மனு

Fri Jul 11 , 2025
பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நேரடி வாரிசுகள் நாங்கள் தான், அவரது சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கமுதி அருகே மேலராம நதி கிராமத்தை சேர்ந்த சிலர் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் உ.முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டித்தேவருக்கு இந்திராணி, நாகம்மாள்என இரு மனைவிகள் இருந்தனர். இந்திராணியின் மகன் முத்துராமலிங்க தேவர் திருமணம் […]
muthuramalingar

You May Like