ஆந்திர மாநிலம் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, அமராவதி என்ற பெயரில் சப் காண்ட்ராக்ட் வழங்கி கணக்கில் வராமல் 118கோடி ரூபாய் பெற்றுள்ள புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா, விஜயவாடாவில் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் என்.டி.ராமாராவ் குறித்து பேசாமல், சந்திரபாபு நாயுடு அடுத்த முதல்வராக வந்தால் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக ஆந்திராவை மாற்றுவார், சிறந்த ஞானம் கொண்டவர், மாஸ்டர் பிளான் வைத்து இருக்கிறார் என்று ரஜினி கூறியுள்ளதை மட்டுமே நான் கண்டித்தேன் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.