ரஜினிகாந்தின் கூலி படத்தின் 2வது பாடல் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது..
74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது..
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இந்த நிலையில் இந்த படத்தின் 2-வது பாடலான மோனிகா பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார்.. மேலும் பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது..