பிறந்தநாளை கொண்டாட கள்ளக்காதலனுடன் oyoவில் உல்லாசமாக இருந்தபோது, கணவன், இரண்டு குழந்தைகள் வந்ததால், அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக சேலை கூட கட்டாமல் அரை நிர்வாணமாக எகிறி குதித்து ஓடும் பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் அவரை உளவு பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண் oyo ஹோட்டலில் அறை எடுத்து தனது பிறந்தநாளை கள்ளக்காதலனுடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு இருவரும் அதே அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் மீரட்டில் உள்ள oyo ஹோட்டலில் மனைவி இருப்பதை அறிந்த கணவர் குழந்தைகளுடன் அந்த oyo ஹோட்டலுக்கு சென்றுள்ளார். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி இவர்களை கண்டதும், எங்கே மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று, ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக சேலை கூட உடுத்தாமல், அரைகுறை ஆடையுடன் சுவர் ஏறி குதித்து காம்பவுண்ட் மேல் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.
ஒரு கையில் கட்டியிருந்த சேலை, மற்றொரு கையில் செருப்பை எடுத்துக்கொண்டு அரைகுறை ஆடையுடன் சுவர் எகிறி குதித்து ஓடும் பெண்ணை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.