அதிமுக பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – கூட்டணி உறுதியானது முதலே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய உள்துறை அமைச்ச அமித்ஷா கூறி வருகிறார். அவரின் இந்த கருத்துக்கு முரணாக அதிமுக ஆட்சி தான் அமையும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிரபல ஆங்கில் நாளேட்டிற்கு பேட்டியளித்த அமித்ஷா 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மீண்டும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா சொல்வதே வேதவாக்கு என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித்ஷா கூறியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக ஏற்கனவே பதிலளித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.. பெரும்பான்மை உடன் அதிமுக ஆட்சி என பழனிசாமி கூறியதன் மூலம் கூட்டணி ஆட்சி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
Read More : பாஜக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை.. அமித்ஷா தூண்டில் போட்ட நிலையில் மீண்டும் தவெக திட்டவட்டம்..