பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள 541 புரொபஷனரி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2025 தேதிப்படி விண்ணப்பதாரர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் அரசு விதிகளின்படி சலுகை உள்ளது.
சம்பள விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களிலிருந்து முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அக்டோபர் – நவம்பரில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://sbi.co.in/web/careers/current-openings என்ற எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் அல்லது https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற வலைப்பக்கம் மூலம் 14.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், ஓபிசி, பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளின் விண்ணப்பிப்பவர்களுக்குக் கட்டணம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: மாடலிங் துறையின் “சாக்லேட் கேர்ள்” 26 வயதில் மரணம்..? – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்