அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.. இபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்.. அப்ப அமித்ஷா சொல்றது?

EPS vs Amitshah

2026-ல் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித் ஷா திரும்ப திரும்ப கூறிவரும் நிலையில் அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.. அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது.. உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதலமைச்சர் நாடகம் நடத்தி வருகிறார். மக்கள் செல்போன் எண்களை பெறவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டுவரப்படுகிறது..


ஆனால் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.. சுற்றுப்பயணத்தின் போது மக்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது.

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது.. தேர்தல் நேரத்தில் பல புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது… அப்போது பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக கூட்டணி இருக்கும்.. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. ” என்று தெரிவித்தார்..

தமிழ்நாட்டில் அதிமுக – கூட்டணி உறுதியானது முதலே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மத்திய உள்துறை அமைச்ச அமித்ஷா கூறி வருகிறார். அவரின் இந்த கருத்துக்கு முரணாக அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு கூட பிரபல ஆங்கில் நாளேட்டிற்கு பேட்டியளித்த அமித்ஷா 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று மீண்டும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா சொல்வதே வேதவாக்கு என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியிருந்தார். அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

Read More : 5.36 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் சைக்கிள்.. குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு..!!

RUPA

Next Post

#Breaking : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்... திரையுலகினர் இரங்கல்..

Mon Jul 14 , 2025
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவருக்கு வயது 87. பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வால் சரோஜா தேவி காலமானார்.. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த […]
b saroja devi 1

You May Like