“ அதை மட்டும் செய்திடாதீங்க..” சரோஜா தேவிக்கு ஜெயலலிதா சொன்ன அட்வைஸ்..

saroja devi jaya 2025 07 68c4ec75cc6ddd1bfa42b8c63ede32c4

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. திரையுலக சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..


சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்தார். 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சரோஜா தேவி.. 1958- ஆம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சரோஜா தேவி..

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்டங்களில் நடித்தவர் சரோஜா தேவி.. இந்திய திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் 26 படங்கள், சிவாஜி உடன் 22 படங்களில் அவர் நடித்துள்ளார்.

பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசை முகம், ஆலய மணி, கல்யாண பரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை, புதிய பறவை என பல வெற்றிப் படங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகைகளில் சரோஜா தேவியும் ஒருவர். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அந்த காலக்கட்டத்தில் பிசியான நடிகைகளில் இவரும் ஒருவர்.. ஒரு நாளில் 18 மணி நேரம் நடிப்பாராம்.. 8 வருடங்களில் 62 படங்களில் கதாநாயகியாக நடித்தது ஒரு உலக சாதனையாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் விருதுகள், மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் வென்றுள்ளார். 1967-ல் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை மணந்த சரோஜாதேவிக்கு கௌதம் ராமச்சந்திரன், இந்திரா என 2 வாரிசுகள் உள்ளனர்.

அவர் கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் நடித்திருந்தார்.. நடிகை சரோஜா தேவியின் ‘கோபால்’ வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று..

அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம். ராஜன் என உச்ச நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. அப்போதே நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் நடிகை சரோஜா தேவி..

ஒருமுறை சரோஜா தேவிக்கு நடிகை ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ் தற்போது வைரலாகி வருகிறது.. நேர்காணல் ஒன்றில் பேசிய சரோஜா தேவி “ ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு கூட என்னை பல முறை அழைத்து பேசி உள்ளார். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது.. நான் நிறைய முறை ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறேன்.. என்னோடு மிகவும் நல்ல முறையில் பழகுவார்.. என்னுடைய புதியப்பறவை படத்தை அடிக்கடி பார்ப்பாராம்.. அவருக்கு மிகவும் பிடித்த படம் என்று என்னிடம் கூறியுள்ளார்..

ஒருமுறை ஜெயலலிதா என்னிடம் நீங்க இப்போ டாப்-ல இருக்கீங்க.. அங்க இருந்து எந்த காரணத்திற்காகவும் கீழ இறங்காதீங்க.. சின்ன ரோல் எல்லாம் ஒத்துக்காதீங்க.. நீங்க இப்போ எப்படி இருக்கீங்களோ கடைசி வரை அப்படியே இருக்கணும்..” என்று ஜெயலலிதா தன்னிடம் கூறியதை சரோஜா தேவி நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்..

Read More : #Breaking : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்… திரையுலகினர் இரங்கல்..

RUPA

Next Post

200க்கும் மேற்பட்ட திரைப்படம்.. எந்த மொழியாக இருந்தாலும் அவரே டப்பிங் பேசுவாராம்..!! - சரோஜா தேவி குறித்த சுவாரஸ்ய தகவல்

Mon Jul 14 , 2025
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் […]
saroja

You May Like