Google Pay, PhonePe, Paytm, BHIM, Amazon Pay போன்ற UPI (யுபிஐ) பண பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தும் அனைவருக்கும் முக்கியமான செய்தி. ஜூலை 15ஆம் தேதி முதல், யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது அது பெறுநருக்கு சென்று சேரவில்லை என்றால், அந்த பணத்தை திரும்பப் பெறும் நடைமுறைகள் (Chargeback Rules) புதிய முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.
சாதாரணமாக, நீங்கள் யுபிஐ மூலம் ஒருவருக்கு பணம் அனுப்புகிறீர்கள்.
உங்கள் அக்கவுண்டில் பணம் டெபிட் ஆனது. ஆனால் அந்த பணம் பெறுநரின் அக்கவுண்டில் சேரவில்லை என்றால் உடனே பேங்கில் புகார் கொடுக்கிறீர்கள், அல்லது யுபிஐ ஆப்பில் “Raise Complaint” கொடுக்கிறீர்கள். இதுதான் “Chargeback Request” ஆகும். இதனையே இனிமேல் சரியான கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் NPCI (National Payments Corporation of India) வழிநடத்த உள்ளது.
Google Pay, PhonePe, Paytm, BHIM, Amazon Pay போன்ற யுபிஐ பயனர்களுக்கு இந்த விதி பொருந்தும். இந்த விதிகள் ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் யுஆர்சிஎஸ் (URCS) என்று அழைக்கப்படும் யுபிஐ டிஸ்பூட் ரெசொலூஷன் சிஸ்டம் (UPI Dispute Resolution System) மட்டுமே பொருந்தும். ஆகவே, யுபிஐ ஆப்கள் இல்லாமல், மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது, இந்த விதிகள் பொருந்தாது.
முக்கிய அம்சங்கள் என்ன?
* பண பரிமாற்றம் தோல்வியடைந்தால், 30 நாட்களுக்குள் சார்ஜ்பேக் கோரிக்கை அளிக்கலாம்.
* ஒரு யுபிஐ ஐடியை பயன்படுத்தி அதிகபட்சம் 10 சார்ஜ்பேக் கோரிக்கைகள் மட்டுமே அனுமதி.
* அனுப்புநரும், பெறுநரும் சேர்ந்து 5 கோரிக்கைகள் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
* இதை விட மேலாக இருந்தால், NPCI கோரிக்கையை நிராகரிக்கலாம்.
* ஆனால், உங்கள் வங்கி விருப்பப்பட்டால், “Good Faith” அடிப்படையில் கூடுதல் கோரிக்கையை அனுமதிக்கலாம்.
* இதை NPCI “RGNB – Remitting Bank Raising Good Faith Negative Chargeback” என அழைக்கிறது.
Read more: AI மூலம் ஆபாச வீடியோ.. இணையத்தில் வெளியிட்டு வருமானம் ஈட்டிய இளைஞன் கைது..!!