குட்நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு.. எவ்வளவு தெரியுமா?

gettyimages 1157433618 640x640 1

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.1,120 உயர்ந்துள்ளது

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 10 குறைந்து, ரூ.9,145க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2 குறைந்து, ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இதை செய்யலன்னா டிக்கெட் புக் பண்ண முடியாது.. இன்று முதல் புதிய மாற்றங்கள் அமல்..

RUPA

Next Post

ESIC-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம்...! முழு விவரம்

Tue Jul 15 , 2025
இஎஸ்ஐ-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். 2025 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன்படி உரிமையாளர்கள் தங்களது […]
esic 2025

You May Like