காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கெளசல்யா. மேலும் நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தை போல உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். திருமலை, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக மாறிவிட்ட கெளசல்யா, 43 வயதான நிலையிலும் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகைகள் பொதுவாக தன்னை பற்றிய கிசுகிசுக்கள் வந்தாலே கடுப்பாகி விடுவார்கள். ஆனால், தன்னை பற்றி இப்போதும், திருமணம் பற்றி செய்தி வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், மக்கள் இன்னும் தன்னை மறக்கவில்லை. ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னைப் பற்றி பேசுவது நல்லது தான் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போது பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் காதல் என கிசுகிசுக்கள் கிளம்பின. நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை. திருமணம் என்பது ஒரு அழகான விஷயம். எனக்கும் என் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருந்தார். அது பிரேக் அப் ஆகிவிட்டது. அதன் பிறகு மனசுக்கு பிடிச்ச யாரையும் என்னுடன் கடைசி வரை வருவார் என்கிற நம்பிக்கையை யாரும் தரவில்லை. இதனால், திருமணமே செய்துக் கொள்ளாமல் பெற்றோர்களுடனே ஜாலியாக வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
நான் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால், ரொம்பவே குண்டாகி விட்டேன். உடல்நலக்குறைவு காரணமாக பலூன் போல ஊதி விட்ட நிலையில், தான் சினிமாவில் நடிப்பதில் இருந்தே விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.