இந்திய தம்பதிகளில் 4ல் 1 தம்பதியினர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்!. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் அதிர்ச்சி!

obesity couples 11zon

இந்திய திருமணமான 4 தம்பதிகளில் 1 தம்பதியினர் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாகவும், அவர்களது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


திருமணமான ஜோடிகள் ஒரே வீட்டில் வாழும்போது, அவர்களின் பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகமாக உணவு அருந்துவது (binge eating), தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் தகவல்களை நெட்டில் பார்க்கும் பழக்கம் (doomscrolling), கடைசிநேரத்தில் பணிகளை பூர்த்தி செய்வது, மற்றும் சீரற்ற தூக்க முறைகள் ஆகியவை வளர்ந்து வரும் காலகட்டத்தில், திருமணமானவர்கள் உணவுகளை பகிர்ந்து கொள்ளும் போது ஒருவரின் பழக்கங்களை மற்றொருவர் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.

மேலும் இந்த முயற்சியில், அவர்கள் தற்செயலாக ஒருவருக்கொருவர் உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தலைமையில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் படி, இந்தியாவில் திருமணமான ஒவ்வொரு நான்கு ஜோடிகளிலும் குறைந்தது ஒருவருக்கு அதிக எடையோ அல்லது உடல் பருமனாக இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட தம்பதிகளில் இந்த ஆபத்தான உடல் பருமன் விகிதங்கள் காணப்பட்டன.

கேரளா, ஜம்மு காஷ்மீர், டெல்லி, கோவா ஆகிய நகரங்களில் தம்பதியர் உடல் பருமன் விகிதங்கள் ஆபத்தானவையாக உள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள நகர்ப்புற, ஊடகத்தால் பாதிக்கப்பட்ட, பணக்கார குடும்பங்களில் திருமணமான ஜோடிகளுக்கான குறைபாடுகளை தடுக்கும் செயல்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

இந்தியா முழுவதும் உள்ள 52,737 திருமணமான தம்பதிகளிடமிருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-5 2019-21) தரவை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர், இது நாட்டின் மிகப்பெரிய ஆய்வாக அமைந்தது. இதில், சுமார் 27.4% ஜோடிகள் உடல் எடை அதிகரிப்புடன் உள்ளனர். குறிப்பாக நகர்ப்புற, பணக்கார மற்றும் ஊடகத்தால் பாதிக்கபட்ட குடும்பங்களில் இது அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வு ‘Current Developments in Nutrition’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவில் தம்பதிகளின் எடை ஒத்திசைவு குறித்த முதல் நாடு தழுவிய பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது, உடல் பருமன் குறியீடு (BMI) 23 அல்லது அதற்கு மேற்பட்ட ஜோடிகள் அதிக எடை அல்லது அதிக பருமனாக வகைப்படுத்தப்பட்டனர். பணக்கார செல்வந்தர்கள் பிரிவில் தோராயமாக பாதி தம்பதிகள் (47.6%), ஏழ்மையான பிரிவில் வெறும் 10.2% பேர் மட்டுமே அதிக எடை/உடல் பருமன் கொண்டிருந்தனர் என்றும் ஆய்வில் தெரியவந்தது.

Readmore: ஐடிஆர் ரிட்டர்ன் தாக்கல் முறைகேடு!. ரூ.1,045 கோடி மோசடி!, சிக்கிய 40,000 பேர்!. என்ன நடந்தது?

KOKILA

Next Post

பெரும் நெருக்கடி!. வெளியேறிய கூட்டணி கட்சிகள்!. பெரும்பான்மையை இழந்த நெதன்யாகு!. இஸ்ரேலில் பரபரப்பு!

Thu Jul 17 , 2025
சர்ச்சைக்குரிய இராணுவ ஆட்சேர்ப்பு மசோதாக் காரணமாக, ஆளும் கட்சியுடனான கூட்டணியில் இருந்து இரண்டு அதி-ஆர்த்தோடாக்ஸ் கட்சிகள் வெளியேறியதால் நெதன்யாகு அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது. மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் […]
netanyahu israel pm 11zon

You May Like