பெரும் நெருக்கடி!. வெளியேறிய கூட்டணி கட்சிகள்!. பெரும்பான்மையை இழந்த நெதன்யாகு!. இஸ்ரேலில் பரபரப்பு!

netanyahu israel pm 11zon

சர்ச்சைக்குரிய இராணுவ ஆட்சேர்ப்பு மசோதாக் காரணமாக, ஆளும் கட்சியுடனான கூட்டணியில் இருந்து இரண்டு அதி-ஆர்த்தோடாக்ஸ் கட்சிகள் வெளியேறியதால் நெதன்யாகு அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை விலகுவதாக அறிவித்துள்ளது. மதக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை இயற்றத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டது. புதிய இராணுவச் சேவை மசோதாவை உருவாக்க நாடாளுமன்றம் முயற்சி செய்து வருகிறது. அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருக்கள், புனித நூல்களை முழுநேரம் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டால் மத வாழ்க்கையில் இருந்து விலகிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.
ஷேஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்திலிருந்து விலகியது.

இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நேதன்யாகு அரசாங்கத்தை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேலிய நளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நெசெட்டில் 11 இடங்களைக் கொண்டுள்ளது. யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) நெசெட்டில் 7 இடங்களைக் கொண்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் விலகலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது 50 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை. எனவே நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: இந்திய தம்பதிகளில் 4ல் 1 தம்பதியினர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்!. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் அதிர்ச்சி!

KOKILA

Next Post

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு...! ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றம்...! முழு விவரம்

Thu Jul 17 , 2025
களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் […]
tn Govt subcidy 2025

You May Like