#Breaking : கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

fd653032cc0c71097c1948babe72275a 1

கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்..

முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க முத்து.. மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மு.க முத்து, சிறந்த பாடகராகவும் இருந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கும் மனிதர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தப் படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டவர் என்று அப்போது பேசப்பட்டது.. ஆனால் அவரின் திரை வாழ்க்கை உச்சம் பெறவில்லை.. அவரின் திறமைகளுக்கு ஏற்ற இடத்தை அவர் பெறவில்லை..


இதனிடையே மு.க முத்துவுக்கும் கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார். இருப்பினும், முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு தந்தையும் மகனும் 2009-ல் மீண்டும் இணைந்தனர்.

இந்த நிலையில் மு.க முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. இன்று காலை 8 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க அங்கு நேரில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

RUPA

Next Post

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. ஷாக்கில் நகைப்பிரியர்கள்..

Sat Jul 19 , 2025
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]
gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

You May Like