அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று நாமக்கலில்ல் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நியாயமு நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கிறோம்.. தேர்தலுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும்.. தேர்தலுக்கு முன்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சம்மந்தப்பட்ட இரு தலைவர்களும் பேசுவார்கள்..
எங்கள் கட்சி தலைவர் என்ன பேசினார் என்பதை பற்றி தான் நான் இரண்டு தினங்களுக்கு முன்பு பேசியிருந்தேன்.. எங்கள் கூட்டணியில் சண்டையோ, சர்ச்சையோ, எந்த குழப்பம் இல்லை.. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் இருக்கும் வரை எங்களுக்குள் குழப்பம் வராது..
2026 யார் தலைமையிலான கூட்டணி? யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவித்திருக்கிறோம்.. இதில் எந்த விதமான குழப்பம் இல்லை.. திமுக கூட்டணியில் தான் குழப்பம் தொடங்கி உள்ளது.. காமராஜர் அவமதித்த பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கலாமா போகலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடரலாமா என்பதில் குழப்பத்தில் இருக்கின்றனர். இதுபோன்ற எந்த குழப்பமும் அதிமுக – பாஜக கூட்டணியில் இல்லை..” என்று தெரிவித்தார்..