2011 உலகக் கோப்பை!. தோனி சிக்ஸர் அடித்த பேட்டின் விலை எவ்வளவு தெரியுமா?. இத்தனை லட்சமா?.

2011 worldcup dhoni six bat 11zon

கிரிக்கெட்டில் சில போட்டிகள் என்றென்றும் நினைவாகிவிடும். போட்டியுடன், சில வெற்றி ஷாட்களும் மக்களின் மனதில் பதிந்துவிடும். ஒரு வீரரின் இன்னிங்ஸ் அல்லது ஒரு பந்து வீச்சாளரின் அற்புதமான விக்கெட் அல்லது ஒரு பீல்டரின் கேட்ச். இதுபோன்ற பல தருணங்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் வந்துள்ளன. சச்சின் டெண்டுல்கரின் பேட்டில் இருந்து 100வது சதம், மகேந்திர சிங் தோனியின் பேட்டில் இருந்து உலகக் கோப்பையை வென்றது அல்லது விராட் கோலியின் பேட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான 82 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் எடுத்த கேட்ச் இன்றுவரை மக்களால் நினைவில் உள்ளது.


அந்தவகையில், 2011 உலகக்கோப்பை என்றால் இருவர் பெயர் அடிக்கடி பேசப்படும். ஒன்று ஃபைனல் போட்டியில் 91 ரன்கள் விளாசி, கேப்டனாக கோப்பையை வென்றெடுத்த மகேந்திர சிங் தோனி. மற்றொன்று சச்சின் டெண்டுல்கர். போட்டி முடிந்ததும், அனைத்து வீரர்களின் வாயில் இருந்தும் உதிர்ந்த ஒரே வார்த்தை, ஆம், இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனைகளை செய்த, உலக கிரிக்கெட்டின் ஒரு முகமாகவும் இருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு ஒரு மகுடம் போல் இந்த கோப்பை அமைந்தது. மைதானத்தில் சச்சினை தங்களது தோள்களில் தூக்கி சுமந்தபடி வீரர்கள் மைதானத்தை வலம் வந்ததே அதற்கு சான்று.

ஆனால், 2011 உலகக்கோப்பை தொடரில் நாம் கொண்டாட வேண்டிய வீரர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் யுவராஜ் சிங். பேட்டிங், பவுலிங, பீல்டிங் என அனைத்திலும் ஜொலித்தவர். அடுத்து, அதிக விக்கெட்டுக்களை சாய்த்த ஜாகீர் கான். தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை செய்த கவுதம் கம்பீர். அத்துடன் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றுதான்.

இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு. சற்றே கடினமான இலக்குதான். அன்றைக்கு 250 ரன்களுக்கு மேல், அதுவும் இறுதிப் போட்டியில் என்பது, கூடுதலான அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ரன்கள். அதிரடி மன்னன் சேவாக், ஜாம்பவான் சச்சின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இந்தய வீரர்களுக்கு அதிர்ச்சி கிடைத்தது. மலிங்கா ஓவரில் டக் அவுட் ஆனார் சேவாக். இந்த, அதிர்ச்சி ஓய்வதற்குள் சச்சினும் 18 ரன்னில் மலிங்காவிடமே வீழ்ந்தார். 31 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து இந்திய தடுமாறியது.

அப்போது அனுபவம் குறைவான இளம் வீரர் கோலி. அனுபவம் வாய்ந்த கவுதம் கம்பீர் உடன் ஜோடி சேர்ந்து தூணாக நின்று விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார் விராட்.தேவையான நேரத்தில் சில பவுண்டரிகளை விளாசிய விராட், சிங்கிள்களாக அடித்து அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. இக்கட்டான நேரத்தில் அந்த 35 ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று.

இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் யுவராஜ் அடித்தது 21 ரன்களாக இருக்கலாம். ஆனால் பந்து வீச்சில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆம், முக்கியமான நேரத்தில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர். 48 ரன்களுடன் களத்தில் வலுவாக இருந்த கேப்டன் சங்ககாராவின் விக்கெட்டை சாய்த்தார். மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படும் தில்ஷான் சமரவீராவை 21 ரன்னில் வெளியேற்றினார். ஆனால், அந்த தொடர் முழுவதுமே ஆல் ரவுண்டராக ஜொலித்தார் யுவராஜ்.

அதில் மகுடம் போன்றதுதான் தோனியின் கேப்டன்சி. 28 ஆண்டு கனவை நனவாக்கியவர். கங்குலி உள்ளிட பல கேப்டன்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கபில் தேவ்-க்கு பிறகு தோனியையே வந்து சேர்ந்தது. இதற்கு சான்றாக, இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த ‘வின்னிங் ஷாட்’ சிக்சரை கெளரவிக்கும் வகையில், அந்த சிக்சர் விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்ற மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து உள்ளது. தோனி அடித்த சிக்சர் விழுந்த குறிப்பிட்ட இடத்தை ஒட்டியுள்ள நான்கு அல்லது ஐந்து இருக்கைகளை அதன் நினைவிடமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தோனியின் பேட்டின் விலை என்ன? 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி அடித்து ஆட்டத்தை வென்ற ஷாட் அவரது ரசிகர்களின் இதயங்களிலும் வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்துவிட்டது. தோனியின் இந்த பேட் ஏலத்தில் 75 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது, இது இந்திய மதிப்பில் சுமார் 87 லட்சம் ரூபாய் மதிப்புடையது. சந்தையில் ஒரு பேட்டின் விலை பொதுவாக நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை இருக்கும், அதேசமயம் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி அடித்த வெற்றி ஷாட் பேட்டின் விலையை ரூ.87 லட்சமாக உயர்த்தியுள்ளது.

Readmore: குட் நியூஸ்..! பொது வருங்கால வைப்பு நிதி.. வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை…!

KOKILA

Next Post

"தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை" முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும்...! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...?

Sun Jul 20 , 2025
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, […]
Mk Stalin Tn Govt 2025

You May Like