நக வெட்டி கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகின்றன. அவற்றைப் பார்ப்பது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாது. அனைத்து நக வெட்டிகளிலும் கீழே ஒரு துளை இருப்பதை நாம் பார்த்திருக்கலாம், ஆனால் அதை நாம் கவனித்திருக்க மாட்டோம். ஆனால் நக வெட்டியின் கீழே உள்ள துளை உண்மையில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நகவெட்டியின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துளை வடிவமைப்பிற்காக உருவாக்கப்பட்டது என பலர் நினைக்கிறார்கள். அதனால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. நகவெட்டியின் இந்த துளைக்கு பல பயன்பாடுகள் உள்ளன. நகம் வெட்ட ஒரு பிடிமானம் தேவைப்படும். நகவெட்டியில் உள்ள கத்திகள் ஒரு சிறிய துளையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நகவெட்டியை சுழற்றுவது, திறப்பது, மூடுவதை எளிதாக்கும்.
நகவெட்டியில் உள்ள துளையினை சாவிக் கொத்துடன் இணைத்து கீ செயின் போல பயன்படுத்தலாம். இதனால் அலுவலகம் செல்லும்போது, ஏதேனும் பயணம் மேற்கொள்ளும்போது கூட நகவெட்டிதை கொண்டு செல்ல எளிதாக இருக்கும். சாவியுடன் கொண்டு செல்வதால் நகவெட்டியில் உள்ள கத்திகளை அவசரகாலங்களில் பயன்படுத்த முடியும்.
மற்றொரு பயன் என்னவென்றால் பொதுவாக அலுமினியம் அல்லது இரும்பு கம்பிகளை வளைக்க சிரமமாக இருக்கும். நகவெட்டியின் சிறிய துளை மூலம் அலுமினிய கம்பிகளை நுழைத்தால் அவற்றை எளிதில் வளைக்க முடியும். அதே நேரத்தில், சிலர் அந்த துளையை நகங்களின் அடியில் சுத்தம் செய்யும் சிறிய கருவியாகவும் பயன்படுத்துகிறார்கள். கிளிப்பரின் நுனியை அல்லது மெல்லிய பின்வட்டம் உள்ள பொருளை அதில் செருகி, கழுவ முடியாத அழுக்குகளையும் சுத்தம் செய்கிறார்கள்.
Read more: முடிவுக்கு வரும் பாமக மோதல்..? அன்புமணி தலைமையிலான போராட்டத்திற்கு ராமதாஸ் வாழ்த்து..!!