ஷாக்.. 5-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு அதிகரித்துள்ளது?

DALL E 2023 11 06 17 35 28 Create a luxurious and captivating banner for an article that celebrates the marriage of traditional Indian gold jewelry with contemporary design aest e6f89ab642 1 1

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 10 உயர்ந்து ரூ.9,180க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்லி ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ஷாக்!. ரூ.15,851 கோடி ஜிஎஸ்டி ஊழல்!. 3558 நிறுவனங்கள் மோசடி!. 53 பேர் கைது!

English Summary

The price of gold has increased by Rs. 80 per sovereign, and is being sold for Rs. 73,440 per sovereign.

RUPA

Next Post

இளைஞர்கள் கவனத்திற்கு..! நாளை முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஆரம்பம்...!

Mon Jul 21 , 2025
தருமபுரி மாவட்டத்தில் நாளை முதல் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமை பணிகள் – || (தொகுதி || மற்றும் || A பணிகள்) முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]
tnpsc exam 2025

You May Like