அதிமுகவை அழித்துவிட்டு, திமுக உடன் போட்டிப்போட வேண்டும் என்பதே பாஜகவின் அஜெண்டா என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பியும், அமைச்சருமான அன்வர் ராஜா, பாஜக கூட்டணி தொடர்பாக அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.. அதற்கு புறம்பாக தற்போது அதிமுக இருக்கிறது.. கொள்கைகளுக்கு மாறாக அதிமுக செயல்பட்டு வருகிறது.. தற்போது அதிமுக பாஜக உடன் கூட்டணியில் இல்லை.. பாஜகவின் கையில் அதிமுக சிக்கி இருக்கிறது..
3 முறை பேட்டியளித்த அமித்ஷா தமிழ்நாட்டின் என்.டி.ஏவின் கூட்டணி ஆட்சி தான் என்று உறுதியாக கூறிவிட்டார்.. ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா சொல்லவே இல்லை.. எடப்பாடி பழனிசாமி 10 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. ஆனால் அதிமுக வெற்றி பெற்றால் நான் தான் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியவில்லை..
எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அந்த கட்சியை அழிப்பது தான் பாஜகவின் நோக்கம்.. திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை போல் அதிமுகவை அழித்துவிட்டு, திமுக உடன் போட்டிப்போட வேண்டும் என்பதே அவர்களின் அஜெண்டா.. அதன்படி தான் தற்போது பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது..
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக என்பது ஒரு நெகட்டிவ் ஃப்ரோஸ்.. அதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.. நிச்சயமாக தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்.. தலைவர்களை வைத்து தான் தமிழக மக்கள் வாக்களிக்கின்றனர்.. தமிழ்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள்.. 1971-ல் எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து தேர்தலில் மக்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள். அதன்பின்னர் கலைஞர், ஜெயலலிதா மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர்..
அந்த வகையில் ஸ்டாலின் இந்தியாவின் வலிமையான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.. அவருக்கு இணையான தலைவர் அதிமுகவில் இல்லை.. இனிமேலும் வருவார்களா என்றால் அதுவும் சந்தேகம் தான்.. இனம், மொழியை, சமுதாயத்தை காப்பாற்றுகிற தலைவராகவும், பாஜகவை எதிர்த்து நீதிமன்றம் சென்று கூட இந்தியாவிற்கே மிகப்பெரிய முன்னுதராணமாக இருப்பவர் ஸ்டாலின் தான்.. எனவே அவர் தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதை தான் மக்கள் விரும்புகிறார்கள்.. என்னை அன்போடு வரவேற்றை என்னை சேர்த்துக் கொண்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
பாஜக அதிமுகவை அழித்துவிடும் என்பது அதிமுகவில் உள்ள அனைவருக்கும் தெரியும்.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் இல்லை.. அதிமுகவை அழிப்பது தான் அவர்கள் நோக்கம்..” என்று தெரிவித்தார்.
Read More : #Breaking : திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா.. ஷாக்கில் இபிஎஸ்.. யார் இவர்?



