fbpx

FAKE நியூஸ் பாஜக..!! மீண்டும் வறுத்தெடுத்த உதயநிதி..!! ஆட்சியை பற்றி எங்களுக்கு கவலையில்லை..!!

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ள தயாநிதிமாறன் ஃபிட்டாக உடலை வைத்திருப்பவர். அவர் நிகழ்ச்சிகளில் கொடுக்கும் டீ, காபி, பிஸ்கட்டை தொடவே மாட்டார். என்னைத் தூக்கி வளர்த்தவர் தயாநிதி மாறன்

கலைஞருக்கு கிரிக்கெட் போட்டிகள் மீது அதிக ஆர்வம் உண்டு. முதலமைச்சர் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர். விளையாட்டை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அணியில் பொறுப்பு கிடைக்காதவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் மீது புகார் தெரிவிப்பார்கள். உங்களுக்கான ஒரே ஆதாரம் மினிட் புக். மினிட் புக் பராமரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த மாநிலத்தில் வென்றாலும், தமிழ்நாட்டில் மட்டும் ஒருபோதும் வெல்ல முடியாது. அதற்கான காரணம் திமுக என்ற வலுவான அணியும், அணியை வழிநடத்தும் கேப்டன் முத்துவேல் ஸ்டாலின். அணிகளுக்குள் போட்டி இருக்க வேண்டும். ஆட்சி பற்றி கவலையில்லை கொள்கைக்காக நிற்போம். 9 வருடத்திற்கு முன்னால் இந்தியாவையே மாற்றுவேன் என சொன்னார் பிரதமர். அதே போல சொன்னதை செய்துள்ளார் பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்துகள்.

சனாதனம் பற்றி பேசியதற்காக என் தலைக்கு 10 கோடி, அவர் தலையை எடுத்தால் 100 கோடி, என வருகிறவர் போகிறவர் எல்லாம் தலைக்கு விலை பேசுகிறார்கள். அம்பேத்கர் பேசாததை, அண்ணா பேசாததை நான் பேசவில்லை. FAKE நியூஸ் மட்டும்தான் பாஜகவின் முழு நேர வேலை. என் மீதான தாக்குதல் தனிமனித தாக்குதல் இல்லை, கொள்கை தாக்குதல்“ என பேசினார்.

Chella

Next Post

’விஜயலட்சுமியின் மோசமான வீடியோக்கள்’..!! ’இது யாரு புதுசா இருக்கு’..? நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய மகளிர் சங்கம்..!!

Sat Sep 9 , 2023
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அரசியல் தலையீடு இல்லாமல் சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் மனு ஒன்றை அளித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா, ”விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் சீமான் மீதான […]

You May Like