முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இன்று நடைபெற இருந்த சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றே முதலில் கூறப்பட்டது.. மேலும்2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.. கோவை, திருப்பூருக்கு நாளை முதல்வர் செல்ல உள்ள நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதால் முதலமைச்சரின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதில் “ காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது முதல்வருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது.. அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்யவும் மருத்துவ பரிசோதனைக்காகவும் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமைக்கு சென்றுள்ளனர்.. முதல்வரின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.. முதலமைச்சர் 2 நாட்களும் அப்போலோவில் சிகிச்சை பெற்று ஓய்வெடுப்பாரா? அல்லது இன்று மாலை வீடு திரும்புவாரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : கிட்னி திருட்டு.. திமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு.. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..