மூளையின் நியூரான்கள் செயலிழந்து கோமா நிலை ஏற்படுவது குறித்து நாம் ஆங்காங்கு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் கோமா நிலை என்பது பற்றிய சரியான விளக்கம் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். கோமா நிலை குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
சவுதி அரேபிய இளவரசரான அல்-வலீத், 2005 ஆம் ஆண்டு தனது 15 வயதில், லண்டனில் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். தொடர்ந்து 20 வருடங்களாக கோமாவில் இருந்து வந்த அல்- வலீத், தூங்கும் இளவரசன் எனவும் அழைக்கப்பட்டு வந்தார். இந்தநிலையில் அவர், தனது 36 வயதில் காலமாகியுள்ளார். அவரது மறைவினையொட்டி, சவுதி அரேபிய அரச குடும்பம், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.
கோமா நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றபோதும் சிலருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எதிர்பாரா விபத்து மூலம் தலையில் பலமாக அடிபட்ட சிலர் கோமா நிலைக்குச் செல்லலாம். இதயத் தமனியின் உள்ளே கொழுப்புப் படலம் மூலம் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு கோமா நிலை ஏற்படலாம். நாள்பட்ட நீரிழிவு, இதய பாதிப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு கோமா நிலை ஏற்படலாம். வாதம் உள்ளிட்ட நரம்பு மண்டல நோய்க்காக சிகிச்சை பெறும் முதியோருக்கு கோமா ஏற்படலாம். கோமா நிலை வராமல் தடுக்க நேரடித் தீர்வு என எதுவும் கிடையாது.
கோமா நிலை என்றால் என்ன? மூளைக்கு இதயத்தின் தமனியில் இருந்து ரத்த சப்ளை குறைவாக இருக்கும்போதோ அல்லது முற்றிலும் தடைபடும்போது மூளையின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூளை செயலிழப்பு ஏற்படும். இந்த நிலையே கோமா நிலை எனப்படுகிறது. கோமா நிலை நான்கு வகைபடுகிறது. கோமா நிலையின் முதல் அறிகுறியாக ஒருவருக்கு நினைவுத் திறன் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் லாஜிக், ரீசனிங் திறன் குறையும். சிலர் அதீத மனஅழுத்தத்துக்கு உள்ளாகி கூச்சலிடுவர். இது மிதமான நான்காம் நிலை கோமாவாகக் கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் உடலின் எந்த பாகங்கள் சரியாக செயல்படாது என்பது உள்ளிட்ட கேள்விகள் நம் மனதில் எழும். கோமா என்பது நீண்டகாலமாக மயக்க நிலையில் இருக்கும் ஒரு நிலை. ஒரு நபர் நகரவோ நடக்கவோ முடியாதபோது இது நிகழ்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது நபர் தூங்குவது போல் தோன்றலாம், ஆனால் இந்தத் தூக்கத்தை யாரும் எழுப்பினாலோ, மின்சார அதிர்ச்சி கொடுத்தாலோ அல்லது ஊசியால் குத்தினாலோ கூட கலைக்க முடியாது.
உண்மையில், மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, மாரடைப்பு அல்லது மூளை பக்கவாதம் ஏற்பட்டாலோ அல்லது மதுவுடன் கலந்த எந்தவொரு போதைப்பொருளையும் உட்கொண்டாலோ, ஒருவர் கோமா நிலைக்குச் செல்கிறார். இருப்பினும், 50% க்கும் மேற்பட்ட கோமா நிலைகள் கடுமையான மூளைக் காயத்தால் ஏற்படுகின்றன. ஒருவர் கோமாவில் இருக்கும் காலம் சில வாரங்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட இருக்கலாம். ஆனால் எந்த நோயாளியும் கோமாவிலிருந்து உடனடியாக மீள முடியாது.
கோமா நிலைக்குச் சென்ற பிறகு, ஒருவர் மயக்கமடைந்துவிடுவார், அவர் எழுந்திருப்பது கடினமாகிவிடும், ஆனால் அவரைச் சுற்றி பல மாற்றங்கள் நிகழ்கின்றன, கண்கள் மூடுதல், வலி அல்லது ஒலிக்கு பதிலளிக்க இயலாமை போன்றவை. கோமா நிலைக்குச் செல்லும் ஒருவர் எழுந்திருக்க முடியாது, விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார், எதற்கும் எதிர்வினையாற்ற மாட்டார். அவரது மூளை உணர்வு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.கோமாவில் உள்ள சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், இதன் காரணமாக அவர்கள் வென்டிலேட்டரில் வைக்கப்படுகிறார்கள். இது தவிர, அந்த நபருக்கு விழுங்குவதில் சிரமம், இருமல் போன்றவையும் இருக்கும்.
கோமாவின் இரண்டாம் நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் கை, கால்கள் வேலை செய்யாது. இவர்கள் மயக்கத்தில் படுக்கையில் படுத்திருப்பர். மூளையின் கட்டளைகள் உடல் பாகங்களுக்கு சரியாகப் போய்ச்சேராது. இந்த நிலையிலும் இவர்களால் கண்களை மூடியபடி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேச முடியும். அருகில் இருப்பவர்களை தொடுதல் மூலமாக உணரமுடியும். சிலரால் கை, கால் விரல்களை லேசாக அசைக்க முடியும். இவர்களால் அவர்களது தனிப்பட்ட வேலைகளைச் செய்துகொள்ளவோ, சாப்பிடவோ முடியாது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்களின் உதவி தேவை.
மூன்றாம் நிலை கோமாவில் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் பெரும்பாலும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். குளுகோஸ் மூலம் உடலுக்கு ஊட்டச்சத்து செலுத்தப்படும். இந்த நிலையில் சிறுமூளை நியூரான்கள் செயலிழந்துவிடுவதால் இவர்கள் படுக்கையில் உறங்கும் நிலையிலேயே இருப்பர். இவர்களில் சிலருக்கு செவிகள் இயங்குவதால் இவர்களால் அருகில் உள்ளவர்களது குரல்களைக் கேட்க முடியும். கண் இமைகளை லேசாகத் திறந்து மூடவும் முடியும்.
கோமாவின் உச்சகட்ட நிலை நான்காம் நிலை. நான்காம் நிலை கோமாவுக்குத் தள்ளப்படுபவர்கள் ‘வெஜிடேட்டிவ் அன்கான்ஷியஸ்னஸ்’ என்னும் நிலைக்குச் செல்கின்றனர். இவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுவிடுவர். இவர்களின் மூளை கட்டளை மூலம் உடல் உறுப்புகள் இயங்கும். வயிற்றில் உணவு செரிமானமாகும். சிறுநீர், மலம் வெளியேறும். வியர்வை சுரப்பிகள் வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு செவித் திறனோ, தொடுதல் உணர்வோ இருக்காது. இந்த நிலையில் உள்ளவர்கள் சில வாரங்களில் மூன்றாம், இரண்டாம் நிலைக்குத் திரும்பி, பின்னர் கோமாவில் இருந்து படிப்படியாக வெளியே வரவும் வாய்ப்புள்ளது.
ஆனால் மூளையின் கட்டளைகள் உடல் உறுப்புகளைச் சேராமல் இந்த நிலையிலேயே மரணம் அடைந்தவர்களும் உண்டு. மருத்துவர்கள் கோமா நிலையில் உள்ளவர்களின் மூளைத்திறனை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் கண்டறிவர். மூளை நியூரான்கள் மீண்டும் இயங்கத் தொடங்கினால் இவர்களது கண், கை, கால் அசைவைக் கொண்டு மருத்துவர்கள் இவர்கள் எந்த நிலையில் உள்ளனர் எனக் கண்டறிவர்.
Readmore: லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா?. இந்த 6 விஷியங்களை பண்ணுங்க!. செல்வம் செழிக்கும்!