தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது..
மேலும் 2026 தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியமைப்போம் என்று விஜய்யின் தவெக களமிறங்கி உள்ளது. மேலும் பாஜக மற்றும் திமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அறிவித்துள்ளது. மேலும் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து பேசிய அவர் “ சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தவெக ஏற்க மறுத்துள்ளது.. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த கட்சி “ தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்! என்று தெரிவித்துள்ளது..
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அப்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிகவுக்கு அழைப்பு விடுத்தார்.. ஆனால் இந்த கட்சிகள், அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டன.. இதை தொடர்ந்து, தவெக, நாதகவிற்கு இபிஎஸ் அழைப்பு விட்ட நிலையில் தற்போது இந்த அழைப்பை தவெக நிராகரித்துள்ளது.. அதே போல் சீமானின் நாதகவும் தனித்து போட்டியிடும் என்றே அறிவித்துள்ளது.. எனவே இபிஎஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது…
Read More : அதிமுக தலைமை வலுவிழந்து விட்டது.. தொண்டர்களே நம்ம பக்கம் தான்..!! – ஆதவ் அர்ஜூனா பேச்சு