அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகை யிலும், 2023-14ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1,000 மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு (500 மாணவர்கள், 500 மாணவிகள்) மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 என அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியோடு காலக்கெடு முடிந்த நிலையில், விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திறனாய்வுத் தேர்வு செப்டெம்பர் 30ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முதல் தாள் செப்டெம்பர் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறி வியல், சமூக அறிவியல் வினாக் களும் இடம்பெறும்.
தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்களாக இத்தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறி வியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.