fbpx

’ரூ.16,000 கோடி செலவு பண்ணி இப்படி ஆகிப்போச்சே’..!! ’ஒருத்தர் கூடவா இந்த ஹோட்டலுக்கு வரல’..!! எங்கு இருக்கு தெரியுமா..?

ரூ.16,000 கோடி செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்று, 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இன்று வரை அந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லை. இப்போது அந்த ஹோட்டல் விளம்பரத்துக்காக மாபெரும் தொலைக்காட்சித் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது.

Ryugyong ஹோட்டல் எங்குள்ளது?

Dailystar அறிக்கையின்படி, வடகொரியாவின் தலைநகரான Pyongyang-இல் இந்த Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து 19.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த வானளாவிய கட்டிடத்தின் உயரம் 1082 அடி ஆகும். இதில் 3,000 அறைகள் கட்டும் திட்டம் இருந்தது. ஆனால், இது 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்போது அதற்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் :

இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு 2 ஆண்டுகள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக, பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை இது பெற்றுள்ளது. இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997ஆம் ஆண்டு கட்டுமானம் நிறுத்தப்பட்டது.

விளம்பரம் :

இந்த கட்டிடத்தில் ஜூலை 2011ஆம் ஆண்டு வெளிப்புற கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டன. பிறகு 2013இல் இந்த ஹோட்டல் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை. இந்த ஹோட்டல் உள்ளே முற்றிலும் காலியாக இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் உள்ளன. உதாரணமாக, லிப்ட் ஷாஃப்ட் ‘வளைந்து’ விடப்பட்டதாகவும், அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018இல் கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. பின்னர் இது வடகொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டது.

Chella

Next Post

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், குழந்தைகள் கண் முன்னே நடந்த பயங்கரம்…! தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்….!

Tue Sep 12 , 2023
தலைநகர் டெல்லியில் ,மனைவியின் நடத்தையின் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், கணவன், மனைவியை, குழந்தைகள் கண் முன்னே,கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளையும் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மவுச்பூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் சஜித் என்பவர் தன்னுடைய இளம் மனைவி, அண்டை வீட்டாருடன் முறை தவறிய உறவில் இருப்பதாக சந்தேகித்து அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அதாவது, அப்துல் […]

You May Like