முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. தலைசுற்றல் காரணமாக கடந்த 21-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. மேலும் அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்..
3 நாட்கள் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல் பணிகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை அப்போலோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்ததாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.. மேலும் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்ட பிறகு உடல் நலம் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் “ தலைசுற்ற காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. அதில், முதல்வரின் இதயத்துடிப்பில் இருந்த சிறு மாறுபாடு காரணமாக தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.. இதையடுத்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. அவர் தற்போது நலமுடன் உள்ளார்.. முதல்வர் தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.