ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சிக்கிட்டு, மோனிகா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
லோகேஷ் இதுவரை இயக்கி இருந்த கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற பல படங்கள் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் (LCU) ஒரு பகுதியாக இருந்தபோதிலும், கூலி LCU படம் இல்லை என்றும், தனித்த படமாக இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், கூலி படம் LCUவின் ஒரு பகுதியாக இருந்ததா, கமல்ஹாசன் இந்தப் படத்தைத் தொடங்க முடியுமா என்பதைத் தெளிவுபடுத்தினார்.
கூலி LCU யுனிவெர்ஸின் ஒரு பகுதியாக உள்ளதா?
சமீபத்தில் பரத்வாஜ் ரங்கனுடன் பேசிய லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் விக்ரம் படத்தைப் போலல்லாமல், கூலி ஒரு தனித்த படம் என்றும், அவரது சினிமா பிரபஞ்சத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதுகுறித்து பேசிய அவர் ” LCU யுனிவெர்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லாத மற்றொரு தனித்த படம்” என்று கூறினார்.
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் கூலியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினாரா?
கூலி படத்தின் தயாரிப்பின் போது எங்கும் கமல்ஹாசன் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்பதை லோகேஷ் தெளிவுபடுத்தினார்.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்காக மண்டியிட்டு கெஞ்சவும் தயாராக இருப்பதாக லோகேஷ் கூறினார்.. ஆனால் கூலி படத்தில், கமல்ஹாசனால் நடிக்க முடியாது முடியாது, அதே நேரத்தில் விக்ரம் படத்தில் ரஜினியால் நடிக்க முடியாது என்று லோகேஷ் சுட்டிக்காட்டினார்.
மேலும் “ரஜினி சார் ஏன் விக்ரம் செய்யக்கூடாது, கமல் சார் ஏன் கூலி செய்யக்கூடாது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அது அவர்கள் இருவருக்கும் எழுதப்பட்டது. இந்த இருவரையும் தவிர வேறு யாரும் எதுவும் செய்யக்கூடாது.. எனவே அது நியாயமில்லை.” என்று தெரிவித்தார்.
தனது நேர்காணலில், பாதி ஸ்கிரிப்டை மட்டுமே கேட்ட பிறகு ரஜினிகாந்த் கூலி படத்டில் நடிக்க தயாராக இருந்தார் என்பதை லோகேஷ் கனகராஜ் நினைவு கூர்ந்தார். அப்போது “அவர் சரி என்று சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் பாதியை மட்டும் விவரித்துவிட்டு, இடைவேளையில் நிறுத்திவிட்டு, அவர் ஆர்வமாக உள்ளாரா என்று கேட்டேன். அவர் உடனடியாக சரி என்று சொன்னார். நான் இன்னும் இரண்டாம் பாதியை எழுதவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முழு ஸ்கிரிப்டுடன் நான் திரும்பியபோது, அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது” என்று லோகேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.