வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், அது ஒடிசா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல அடுத்த 3 நாட்களுக்கு இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு சத்தீஸ்கர் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் செப்டம்பர் 16, 17ஆம் தேதிகளில் தெலங்கானாவில் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.