ரஜினிகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்..
வேட்டையன் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி கூலி படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ரஜினிகாந்தை வைத்து இயக்கி உள்ள முதல் படம் என்பதால் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது..
இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்த முக்கிய தகவலை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.. ஒரு நேர்காணலில் பேசிய அவர் “ ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ‘கூலி’ படத்தின் கடைசி இரண்டு படப்பிடிப்பின் போது அவர் தினமும் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடைசி இரண்டு கட்ட படப்பிடிப்பில், ரஜினி சார் தனது சுயசரிதையை எழுதுவதில் மும்முரமாக இருந்தார். அவர் தினமும் எழுதுவார்” என்று கூறினார்.
பின்னர் இயக்குனர், “தினமும், நான் அவரிடம், ‘நீங்கள் எந்த எபிசோடில் இருக்கிறீர்கள்?’ ‘நீங்கள் எந்த கட்டத்தில் இருக்கிறீர்கள்?” என்று கேட்பேன். அதற்கு ரஜினி சார், இது தனது 42வது வயதில் நடந்தது என்றும், பின்னர் இதுதான் நடந்தது என்றும் என்னிடம் கூறுவார்..” என்று தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாத விவரங்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய லோகேஷ், அந்த அனுபவம் எப்போதும் தனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று கூறினார். “எனவே, அது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது போல. நீங்கள் எடுத்துக்கொள்வது அவரின் அந்த அனுபவத்தைத்தான். என்னை மட்டுமல்ல, நம் மாநிலத்தில் உள்ள அனைவரையும் அவருடன் இணைக்கும் ஒரு பொதுவான காரணி, அவர் கடந்து வந்த அனைத்து தடைகளும் தான்,” என்று லோகேஷ் கூறினார்.
கூலி படத்தில் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். அதே போல் நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.. கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் சத்யராஜும் ஒன்றாக நடிப்பதால் இந்தப் படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் கடைசியாக 1986 இல் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் படமான ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் இணைந்து நடித்தனர், அதில் சத்யராஜ் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தார். ‘எந்திரன்’ மற்றும் ‘சிவாஜி’ போன்ற ரஜினிகாந்தின் முந்தைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், சத்யராஜ் வாய்ப்புகளை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.